Skip to main content

Posts

Showing posts from 2012

சோகமும் சுகமானது நீ நண்பனாக கிடைத்ததால் !!!

அன்று  யாருமே  அறியாத  என் சோகத்தை  எப்படி அறிந்தாயடா ? ஏன் சோகம் ? என்ற உன்  கேள்வி  தான்  நம் நட்பின் ஆரம்பம் !!! அதிகம் பேசாமலே  நீ என்னை அறிந்தாய்  நம் நட்பு வளர்ந்தது !! உன்னுடன் பேசும்  ஒவொரு நொடியும்  மகிழ்ச்சியை மட்டுமே  தருகிறாய் !!! சோகத்தில் தல்லப்பட்ட  என்னை  சிரிக்கவும் வைத்தாய் , சிந்திக்கவும்  வைத்தாய்  . சோகமும் சுகமானது  நீ நண்பனாக கிடைத்ததால் !!!

உண்மையான நட்பின் அடையாளம்!

தோழியே ! நீ அருகில் இல்லை ஆனாலும் உணர்கிறேன் உன்னை ! கலங்கி நின்ற நிமிடம் உன் குரல் கேட்டதும் , துணிந்து நின்றேன் ! கண்கள் இரண்டில் , கண்ணீர் முட்ட , உன் நினைவு , கண்ணீரையும் துடைத்தது , அருகில் நீ இல்லாமலே ! யாரும் இல்லை என்ற கவலை அறவே இல்லை . அருகில் இல்லாமல் இருந்தாய் நீ ! பயத்தில் , நடுக்கத்தில் இருந்ததை , எப்படி உணர்ந்தாய் ? இது  பெயர் தான் நட்போ ? தினம் தினம் பேசிக்கொண்டு , சிரித்து  கொண்டால் தான் நட்பா ? இல்லை !!!! என்  இன்பத்தையும் , துன்பத்தையும் சொல்லாமலே , புரிந்து  கொல்லும் நீ தான் , உண்மையான நட்பின் அடையாளம் !

To my dear friend

நீ மிகவும் விரும்பும் கவிதைகளை   உனக்காகவே மீண்டும் எழுத துவங்கி விட்டேன் ! பிழைகளை மன்னிக்கவும் !